தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.04.2026)

thanthitv

தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது....

மாநிலம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்....

பிரசாரம் ஓய்ந்தபின் அமலாகும் விதிகள் வெளியீடு

பிரசாரம் ஓய்ந்தபின் இன்று மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு அமலாகும் விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது...

பிரசாரம் ஓய்ந்த பிறகு டிஜிட்டல் முறையில் பிரசாரம் செய்யவும் தடை...

வாக்காளர் அல்லாதோர் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

சென்னை புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார்....

ரோடு ஷோ சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு இருவரும் வாக்கு சேகரித்தனர்...

"தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல இந்தியாவுக்காகவும் போராடுகிறார் ஸ்டாலின்"

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் என்றும், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளதாகவும் பிரசாரத்தின்போது கெஜ்ரிவால் கூறினார்....

தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல இந்தியாவுக்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்....

ஹார்முஸ் வழியே செல்ல கட்டணம் - ஐரோப்பிய ஒன்றியம் கவலை

ஹார்முஸ் நீரிணையில் பயணிக்க கட்டணம் செலுத்தும் முறை உலகளாவிய கடல்சார் வழித்தடங்களுக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணம்...

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டப் பிரதிநிதி கஜா கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்...

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் 2026

ஐபிஎல் - இன்று SRH Vs DC

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், டெல்லி அணியை ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது...

ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது...

High Court | Vijay | TVK | விஜய்க்கு ஷாக்..! "ரூ.100 கோடி..முறைகேடு" ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

Election Commission | நாளை முடிகிறது.. அமலாகும் புதிய விதிகள்

CM Stalin | திடீரென ஆலோசனையில் இறங்கிய முதல்வர்.. திமுகவினருக்கு முக்கிய அலர்ட்

Selvaperunthagai Congress IT Raid | ட்வீட் போட்ட செல்வப்பெருந்தகை.. IT பரபரப்பு விளக்கம்

Vijay Sangeetha Divorce Case | ``விஜய் தரப்பில் விவாகரத்து கேட்கவில்லை’’ - வெளியானது பரபரப்பு தகவல்