ஐபிஎல் - கொல்கத்தா கேப்டன் ரஹானேவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா தாமதமாக பந்து வீசிய சம்பவம்.....
கொல்கத்தா கேப்டன் ரஹானேவிற்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது....
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 5 பேர் பலி
உக்ரைனின் டினிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்...
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 24 பேர் படுகாயமடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது...
சென்னையில் 3 இடங்களில் இன்று விஜய் பிரசாரம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னை தியாகராயர் நகரில் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார்......
ஆயிரம் விளக்கு, எழும்பூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்..
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு
சென்னையில் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது....
ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.....
275,000
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது....
ஒரு கிராம் 14 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...