தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2026) | 11 AM Headlines | Thanthi TV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.04.2026)

thanthitv

தமிழ் புத்தாண்டு பிறந்தது - கோயில்களில் சிறப்பு பூஜை

பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது....

அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...

தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது...

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சட்டமன்ற தேர்தல் - விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான விசிக-வின் தேர்தல் அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டார்.....

இருமொழிக் கொள்கை, மது ஒழிப்பு, மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 12 உறுதிமொழிகள் விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்துள்ளது...

ஒரு கிராம் 14 ஆயிரத்து 220 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.......

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்