தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2026) | 11 AM Headlines | Thanthi TV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2026)

thanthitv

கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு விதிகளில் அதிரடி திருத்தம் செய்துள்ளது...

எம் சாண்ட் போன்ற கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தடை செய்ய சுரங்கத்துறை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது...

ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் தரம் இல்லாத பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கத் பிரத்யேக வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்...

பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் கூறியுள்ளார்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது...

ஒருகிராம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கும்,

ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும், கிலோவுக்கு 5 ஆயிரம் குறைந்தது...

ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

அழகுமுத்துக்கோன் குருபூஜைக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது...

அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்தாலோ, பந்தயம் வைத்தாலோ வாகன ஓட்டிகளை கைது செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

Tasmac Case | ``மதுபானங்கள் மீது ரூ.10 செஸ் வரி’’ - மதுப்பிரியர்கள் கவனத்திற்கு..

Kovai Girl | பக்கெட்டுக்குள் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் மாணவி உடல் - நம்ப மறுத்து கதறும் பெற்றோர்

ADMK | cv shanmugam |சி.வி.சண்முகம் - பசுபதி ஆதரவாளர்கள் மோதல்.. அதிமுகவில் வெடித்த அடுத்த பரபரப்பு

DMK | ADMK | திமுக, அதிமுக கூட்டணி? - பிரேக்கிங் கொடுத்து அதிரவிட்ட டிடிவி

Minister Arunraj | TVK | அரசு தலைமை வழக்கறிஞரிடம் முக்கிய ஆலோசனை - அமைச்சர் அருண்ராஜ் சொன்ன விஷயம்