தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2026) | 11 AM Headlines | ThanthiTV

thanthitv

  • வினாத்தாள் கசிவு எதிரொலியாக, நாடு முழுவதும் நீட் மறுதேர்வு இன்று நடக்கிறது....மதியம் இரண்டு மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு...

  • நாடு முழுவதும் 551 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 440 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெறுகிறது....22 லட்சத்து 79 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலையில், 6 ஆயிரத்து 669 ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்...

  • தமிழ்நாட்டில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 பேர் நீட் மறுதேர்வை எழுத உள்ளனர்...தமிழகத்திற்கான நீட் தேர்வு மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி என்பவரை தேசிய தேர்வு முகமை நியமித்துள்ளது...

  • நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்புப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்..முறைகேடுகளைத் தடுக்க 1 லட்சத்து 38 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மற்றும் 51 ஆயிரம் ஜாமர்கள் தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டுள்ளன...

  • ஈரோட்டில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது...இதேபோல் புதுக்கோட்டையில் உள்ள தேர்வு மையங்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது...

  • நீட் மறுதேர்வில் எந்தவொரு குளறுபடியும் ஏற்பட மத்திய அரசு அனுமதிக்காது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்...தேசிய தேர்வு முகமை மற்றும் மாநில அரசுகள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...

Neet | பரபரக்கும் நீட் மறுதேர்வு ஏற்பாடுகள் முதல் முறையாக கொண்டுவரப்பட்ட நடைமுறை

NEET re-examination | நீட் மறுதேர்வு - என்னென்ன கொண்டு வர வேண்டும்?அதிரடியாக போடப்பட்ட ரூல்ஸ்

Neet Exam |துப்பாக்கி பாதுகாப்புடன் செல்லும் நீட் வினாத்தாள். Full Force-ல் இறங்கிய துணை ராணுவப்படை

Neet Re Exam | நீட் மறுதேர்வு தொடங்கும் நேரத்தில் மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பரபரப்பு பிரஸ்மீட்

NEET Exam | இன்று நீட் மறுதேர்வு - மாணவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு