தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03.03.2026) | 11 AM Headlines | ThanthiTV

thanthitv
  • மாற்றுத்திறனாளிகள், முதியோர், கைம்பெண்கள் உள்ளிட்ட விளிம்புநிலையில் இருப்போர்க்கு மாதாந்திர உதவித்தொகையுடன், இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதியை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.....37 லட்சத்து 79 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் தலா இரண்டாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

  • மீனவ குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையை தமிழக அரசு விடுவித்துள்ளது...ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு தலா எட்டாயிரம் ரூபாய் வழன்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்...

  • நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இரண்டு பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.......கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாங்குநேரியில் 400 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்...

  • நாங்குநேரியில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....குற்றவாளிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி இருக்கிறது...

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது....ஒரு கிராம் 15 ஆயிரத்து 650 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

  • ஈரானின் உச்ச தலைவர் படுகொலையை மத்திய அரசு கண்டிக்காததை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்......ஈரான் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மவுனமாக இருப்பது, பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்...

  • நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம், இன்று மாலை நிகழ உள்ளது...இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு பகுதிகளில் கிரகணத்தின் காட்சி முழுமையாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

DMK Congress Alliance | திமுக, காங்., கூட்டணிக்குள் என்ன நடக்கிறது? - அதிகாரப்பூர்வ தகவல்

DMK Congress Alliance | நேரடியாக இறங்கும் `ப.சி.’ - திமுக, காங்., கூட்டணியில் பெரிய திருப்பம்

CM Stalin Announcement | "அரசியல் பண்ணதான் செய்வாங்க" - பரபரப்பை கிளப்பிய சுபேர்

CM Stalin Announcement | ``பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை சிறப்புநிதி போலவே இவர்களுக்கும் ரூ.2000''

🔴LIVE : Nellai | தமிழகத்தை பதறவிட்ட `டீக்கடை’ படுகொலைகள் - நெல்லையில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு