தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.03.2026) | 11 AM Headlines | Thanthi TV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.03.2026)

thanthitv

பாஜக ஆளும் மாநிலங்களில் தமிழ்நாட்டை போல் வளர்ச்சியை காட்ட முடியுமா என்று முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்....

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மதுரவாயல் துறைமுகம் திட்டத்தை வரவிடாமல் தடுத்தது அதிமுக என்று பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார்...

என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்....

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...

திமுக - விசிக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது...

திருமாவளவன் தலைமையிலான குழுவினர், 20 தொகுதிகளின் விருப்ப பட்டியலை திமுக-விடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.....

தமிழகத்தில் 3 ஆயிரத்து 412 மையங்​களில், 8 லட்​சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதுகின்​றனர்....

சென்னையில் இரண்டு நாட்களில் 7 ஆயிரம் ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 920 ரூபாய் குறைந்துள்ளது...

ஒரு கிராம் 15 ஆயிரத்து 660 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....

"கூடுதல் தொகுதி கொடுப்பாங்க" - குண்டை தூக்கி போட்ட ராஜகம்பீரன்

DMK | VCK | Congress | "திமுக ஒத்துக்காது" - பகீர் கிளப்பிய டி.வி.சோமு

DMK |VCK | களத்தில் இறங்கிய விசிக.. தொடங்கியது பேச்சுவார்த்தை

Iran War | Ali Khamenei | ஈரான் போர்.. இந்தியா முழுக்க திடீர் எச்சரிக்கை

Fireaccident || Thoothukudi || தூத்துக்குடியில் பயங்கரம்..ஒருவர் மரணம், 2 பேரின் நிலை?