தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.08.2026)

thanthitv

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்ததரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது....

அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவும், நிவாரணத்தை கேள்வி கேட்கவும் நீங்கள் யார் என்று மனுதாரர்களை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்...

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக் கொடி ஏற்றுகிறார்...

விழாவில் முப்படை மற்றும் காவல்துறையின் அணிவகுப்பு நடக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகச் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த 20 காவலர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது...

மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளில், 17 பேருக்கு மிகச் சிறந்த சேவைக்கான விருதும் 3 பேருக்கு மெச்சத்தக்க சேவைக்கான விருதும் வழங்கப்படவுள்ளது...

சுதந்திர தினத்தன்று கீழமை நீதிமன்றங்களில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பு வந்தே மாதரம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றப் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது...

மத்திய அரசின் அறிவுரைப்படி கொடியேற்றிய பின் தேசிய கீதம் பாடவும் தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மோப்ப நாய் மற்றும் ஸ்கேனர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது...

பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், முழுமையான சோதனைக்குப் பின்னரே பயணிகளை ரயில் நிலையங்களுக்குள் அனுமதித்து வருகின்றனர்...

Kilambakkam Railway Station| தமிழகமே எதிர்பார்க்கும் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் - எப்போது ஓபன்?

CM Vijay | முக்கிய அறிவிப்பு வெளியானது

MK Stalin| DMK| திமுகவில் மீண்டும் ஸ்டாலின் வகித்த `செயல் தலைவர்’ பதவி? - துரைமுருகன் அறிவிப்பு

DMK| 10 பெரும் புள்ளிகளின் பதவியை பறிக்கும் தலைமை - அடிவேர் வரை மாற்றம்..திமுகவின் முகமே மாறுகிறது

DMK| 10 பெரும் புள்ளிகளின் பதவியை பறிக்கும் தலைமை - அடிவேர் வரை மாற்றம்..திமுகவின் முகமே மாறுகிறது