பாஜக ஆளும் மாநிலங்களில் தமிழ்நாட்டை போல் வளர்ச்சியை காட்ட முடியுமா என்று முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்....
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மதுரவாயல் துறைமுகம் திட்டத்தை வரவிடாமல் தடுத்தது அதிமுக என்று பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார்...
என்.டி.ஏ. கூட்டணியில் யார், யாரை வழிநடத்துகிறார்கள் என்ற குழப்பம் நிலவுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.....
ஈ.பி.எஸ்.-ஐ மேடையில் வைத்துக்கொண்டே என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று பிரதமர் கூறியதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்..
என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்....
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
புதுச்சேரியில் விசிக-வுக்கு பொதுத் தொகுதியை ஒதுக்க திமுக-விடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.....
விசிக-வின் வலிமைக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.....
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது...
தமிழகத்தில் 3 ஆயிரத்து 412 மையங்களில், 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர்....