சாத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - பரபரப்பு தீர்ப்பு
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது...
தந்தை, மகனை போலீசார் இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க முடிவதாகவும், 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
சைதாப்பேட்டையில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
சென்னை சைதாப்பேட்டையில் இன்று தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது...
பிரசாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது...
தமிழக சட்டமன்ற தேர்தல் - 7,454 வேட்புமனுக்கள் தாக்கல்
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 454 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
6 ஆயிரத்து 95 ஆண் வேட்பாளர்களும், ஆயிரத்து 356 பெண் வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ளனர்...
அதிகபட்சமாக கரூரில் 108 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...
வேட்புமனு பரிசீலனை - வழிகாட்டு நெறிமுறைகள்
வேட்புமனு பரிசீலனைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகி உள்ளது...
வேட்புமனு பரிசீலனையை தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது....