தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2026)

Web Team - Thanthi TV

எரிபொருள் தட்டுப்பாடு - நேபாளத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க நேபாளத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது...

அதன்படி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஹெலிகாப்டர்கள், விமானங்கள் அழிக்கப்பட்ட காட்சி

ஈரானின் தெற்கு பகுதியில் அமெரிக்காவின் இரண்டு ஹெலிகாப்டர் மற்றும் ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தின் வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது...

ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடக்கும் காட்சிகளை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ளது...

ஈபிஎஸ் இன்று 3 மாவட்டங்களில் பிரசாரம்

அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார்...

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்...

புதுச்சேரியில் இன்று அமித்ஷா பிரசாரம்

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்..

மண்ணாடிப்படு தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் வாக்கு சேகரிக்கிறார்..

5 மாநிலங்களில் ரூ.651 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 651 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

தமிழகத்தில் மட்டும் 170 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

தமிழகத்தில் ரூ.170 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

Udhayanidhi Stalin | DMK | பிரசாரத்தின் நடுவே துணை முதல்வர் உதயநிதி கைகாட்டி சொன்ன விஷயம்

Cuddalore | EPS | TN Election | "விஜயகாந்த்.." - மேடையில் பெயரை சொல்லி ஈபிஎஸ் சொன்ன விஷயம்

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..