தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில், மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வியகத்தில் பயின்ற 36 பேர் பணி ஒதுக்கீடு பெற்று சாதனை படைத்துள்ளனர்... இதில் 12 துணை ஆட்சியர்கள், 4 டிஎஸ்பிக்கள், 9 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வரும் இந்த கல்வியகம், இதுவரை 5,500-க்கும் மேற்பட்ட மாணவர்களை அரசு பணிகளில் அமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதல் 20 இடங்களில், 8 பேர் இந்த கல்வியகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.