முக்கிய செய்திகள்

மதியம்1 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) ||ThanthiTV

தந்தி டிவி
• லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய "தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்" அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு...உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா • ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு...சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அம்மன் கோயில்களை தரிசிக்க ஏற்பாடு • தனியார் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர லஞ்சம் பெற்றதாக புகார்...கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு காவல்துறை • கொடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய கோரி குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய் மனு...மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என மனு தாக்கல் செய்தது சிபிசிஐடி... • சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்...உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திகேயன் உள்பட 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... • மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்...முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி • திமுகவுக்கு எதிரான ஒரே மனநிலை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்வது அவசியம்...கூட்டணி தொடர்பாக ஆங்கில நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி சூசக பதில் • பாஜக அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமைக்காக குரல் எழுப்பும்...முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்... • நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி மோசடி...ஒரு கிட்னிக்கு 10 லட்சம் பேரம் பேசிய பணத்தைத் தராமல் இடைத்தரகர்கள் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம்... • நெல்லை வீரவநல்லூர் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளி வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம்...2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் வீரவநல்லூர் போலீசார்.... • கடந்து 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேராவுக்கு பா.ஜ.க அளித்து வரும் பல தொல்லைகளின் தொடர்ச்சி தான் குற்றப்பத்திரிகை...குருகிராம் நில பேர வழக்கில் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த‌து குறித்து ராகுல்காந்தி கருத்து • பீகாரில் 7 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி... • பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான டிஆர்எப்-பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அறிவித்ததற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு...

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு