முக்கிய செய்திகள்

#BREAKING || வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட்

தந்தி டிவி

30 கோடி ரூபாய்க்கும் குறைவான செலவில் தயாரான, இஸ்ரோவின் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் ஏவப்படுகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சிறியரக 2 செயற்கைக் கோள்களுடன், எஸ்.எஸ்.எல்.வி - டி1 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

ஆனால், ராக்கெட் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப் பாதையில் செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து 3 செயற்கைக் கோள்களுடன் கூடிய, சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இ.ஓ.எஸ்-07, ஜானஸ் 1, ஆசாதிசாட்-2 ஆகிய 3 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், தற்போது கூடுதல் கவனத்துடன் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்