முக்கிய செய்திகள்

கொரோனா தொற்று எவ்வாறு ஆபத்தானதாக மாறும்? - ஐஐடி ஆராய்ச்சியில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சளி மருந்துகளை பயன்படுத்தினால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என, சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல் வெளியாகி உள்ளது. • சென்னை ஐஐடி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், கோவிட் தொற்று எவ்வாறு ஆபத்தானதாக மாறும் என்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், • இருமல் சிரப்புகள், சளிநீக்க மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வது சளி நீர்த்துளிகள் உருவாவதைக் கட்டுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. • இதனால், பிறருக்குப் பரவுவதைக் குறைப்பது மட்டுமின்றி, கீழ் சுவாச குழாய்க்கு சளித்துகள்கள் தானாக உள்ளிழுக்காமல் தவிர்க்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. • பாதிக்கப்பட்ட சளித் துளிகள் சுவாசப் பாதையின் ஊடாக பயணிப்பது முக்கிய பங்கு வகிப்பதுடன், பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப நோய்த்தொற்றின் வளர்ச்சியும் தீவிரமும் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. • ஆய்வின் மூலம் தும்மல் மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மூக்கு, தொண்டையில் பாதிக்கப்பட்ட சளித்துளிகள் உருவாவதைத் தடுப்பதுடன், நுரையீரலின் ஆழமான பகுதிக்குள் அவை நுழைந்து பரவாமல் தடுக்க உதவும் எனவும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு