முக்கிய செய்திகள்

12 மணி நேர வேலை மசோதா - இன்று மாலை 3 மணிக்கு முக்கிய ஆலோசனை

தந்தி டிவி
• 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். • தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், அதனை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா கடந்த 21ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது • . இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. • இந்த நிலையில், மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினரின் கருத்துக்களை அறியவும் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. • சென்னை தலைமை செயலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிகின்றனர். • தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கத்தினர், இதில் பங்கேற்கின்றனர்.

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு