காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-27 00:59 GMT
  • நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்... சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்...
  • ஐ.பி.எல். தொடர்களில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, கொல்கத்தா அணி... 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு தொடரிலும் வெற்றிவாகை சூடியது...  
  • மேற்குவங்கத்திற்கும் - வங்கதேசத்திற்கும் இடையே நள்ளிரவில் கரையை கடந்தது ரீமால் புயல்... புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தகவல்...
  • ரீமால் புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை... பல இடங்களில் பலத்த சேதம்... சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள்... 
  • ரீமால் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில், இன்று காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்... உள்நாடு, சர்வதேசம் என 394 விமானங்கள் இயங்காது என அறிவிப்பு...
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 30ம் தேதி வரை, வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்... 
  • கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்... `இந்தியா' கூட்டணியின் வெற்றியை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சமர்ப்பிப்போம் என்றும் சூளுரை... 
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டாவது லேப்டாப் வழங்க வேண்டும்... எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்... 
  • ஊட்டியில் இன்று பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்குகிறது.... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இரண்டு நாட்கள் நடக்கிறது... 
  • ரஃபா பகுதியில் பதுங்கி இருந்த ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம்...பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஹமாசுக்கு பங்கு உள்ளதாகவும் குற்றச்சாட்டு... 
  • இலங்கையில் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது... நீதி மற்றும் சிறைத் துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதி...
Tags:    

மேலும் செய்திகள்