"சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும்".. பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிக்கை

Update: 2024-04-16 05:25 GMT

"சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும்"

பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிக்கை

#bjp #loksabhaelections2024 #electioncampaign #thanthitv

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன், தனது தொகுதிக்கான 59 தேர்தல் வாக்குறுதிகளை உதகையில் வெளியிட்டார். அதில் முக்கிய வாக்குறுதியாக, உதகையில் சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கப்படும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி உலகத்தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மூடப்பட்ட ஃபோட்டோ பிலிம் தொழிற்சாலையில் ஐ.டி. பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு வெளிவட்ட சாலை அமைத்து தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்