பரவிய செய்தி உண்மையானது... பிரதமர் மோடியின் பேரணியில் என்ட்ரி கொடுக்கும் நடிகை

Update: 2024-04-15 05:58 GMT

பரவிய செய்தி உண்மையானது... பிரதமர் மோடியின் பேரணியில் என்ட்ரி கொடுக்கும் நடிகை

கேரளாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோவில் கலந்து கொண்ட பிரபல நடிகை சோபனா, இன்று கேரளா வரும் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணியிலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான சோபனா, பாஜகவில் இணைய போவதாக அண்மையில் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக அவர் ஓட்டு கேட்டு ரோடு ஷோவில் கலந்து கொண்டார். சோபனாவின் இந்த ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கும் நிலையில், இன்று கேரளா வரும் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணியிலும் நடிகை சோபனா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்