கொங்கு மண்டலம் யாருக்கு? தாறுமாறாக வந்த சர்வே ரிசல்ட் - உறுதியான வெற்றி.. மகுடம் இவர்களுக்கே?

Update: 2024-04-17 07:44 GMT

கொங்கு மண்டலம் யாருக்கு? தாறுமாறாக வந்த சர்வே ரிசல்ட் - உறுதியான வெற்றி.. மகுடம் இவர்களுக்கே?

தவிடுபொடியாகும் கணிப்புகள்

சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி 40 முதல் 46 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 35 முதல் 41 சதவீத வாக்குகளையும், பாமக வேட்பாளர் அண்ணாதுரை 9 முதல் 15 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மனோஜ் குமார் 6 முதல் 9 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும் என கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் 39 முதல் 45 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 35 முதல் 38 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் கே.பி. ராமலிங்கம் 11 முதல் 17 சதவீத வாக்குகளையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 41 முதல் 47 சதவீதமும், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38 முதல் 44 சதவீதமும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 5 முதல் 11 சதவீதமும், நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் 6 முதல் 9 சதவீதமும் வாக்குகள் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 35 முதல் 41 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 32 முதல் 38 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 19 முதல் 25 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கருத்துக்கணிப்பு முடிவில் தெரிகிறது.

நீலகிரி தனித் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 36 முதல் 42 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 30 முதல் 36 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் எல். முருகன் 21 முதல் 27 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 31 முதல் 37 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 28 முதல் 34 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 26 முதல் 32 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கருத்துக்கணிப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 37 முதல் 43 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35 முதல் 41 சதவீத வாக்குகளையும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14 முதல் 20 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் 42 முதல் 48 சதவீத வாக்குகளையும் அதிமுக கூட்டணி எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் முபாரக் 34 முதல் 40 சதவீத வாக்குகளையும் பாமக வேட்பாளர் 8 முதல் 14 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் கயிலை ராஜன் 6 முதல் 9 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 41 முதல் 47 சதவீத வாக்குகளையும் அதிமுக வேட்பாளர் தங்கவேல் 35 முதல் 41 சதவீத வாக்குகளையும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 8 முதல் 14 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என கருத்துகணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்