#seeman #seemanspeech
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக, ரவிச்சந்திரன் வேடப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். திரைப்படத்தில் நடித்தால் போதும் நாட்டை ஆளலாம் என்ற ஒரு பார்வை வந்து விட்டதாக பிரச்சார கூட்டத்தில் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், தலைவர்கள் தொண்டர்களாக வராமல், உங்கள் வீட்டு பிள்ளையாக வந்திருப்பதாக அவர் குறிப்பிட்ட போது கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். இந்த நிலையில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.