"தமிழக மக்கள் மனநிலை இதுதான்" - பா.ஜ.க. நிர்வாகிகளிடம் மோடி சொன்ன பாயிண்ட்

Update: 2024-03-30 07:03 GMT

தி.மு.க.வின் ஊழல் மற்றும் குடும்ப அரசியலால் தமிழக மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்று, மாற்றம் வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நமோ செயலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, "எனது பூத், வலிமையான பூத்" என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய அவர், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒரு சாதாரண தொண்டராகவே கழித்ததாக தெரிவித்தார். மேலும், கடினமான உழைப்பு கட்சியை ஆழமான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என்றும் கூறினார். நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக பணியாற்றி வருவதாக கூறிய பிரதமர், "என்னுடைய பூத் வலிமையான பூத்" என்ற முழக்கத்திற்கு தொண்டர்களின் கடின உழைப்பே காரணம் என்றார். உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதில், பெண்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று பேசிய பிரதமர், உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டும் என்றும், அது தான் தன்னுடைய கனவு என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்