நேற்று வேட்புமனு தாக்கல்... இன்று எலும்பு முறிவு...இருந்தும் விளாசிய தமிழச்சி தங்கபாண்டியன்

Update: 2024-03-26 11:41 GMT

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், இரண்டாவது நாளாக மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவறி கீழே விழுந்ததால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், ஊன்றுகோலுடன் பிரசாரம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழிசை தமிழ்நாட்டில் கண்ணுக்கு புலப்படாத ஆளுநராக இருந்ததாகவும், ஆளுநராக இருந்து விட்டு திடீரென்று உங்கள் அக்காவாக வந்துள்ளேன் என்று கூறுபவரிடம் என்ன சொல்வது என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்தார

Tags:    

மேலும் செய்திகள்