அதிமுக Vs பாஜக! - வெளியான அடுத்த லிஸ்ட்..யாருடைய சொத்து மதிப்பு அதிகம்

Update: 2024-03-26 16:49 GMT

பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அசையும் சொத்துக்கள் 64 லட்சத்து 3 ஆயிரத்து 78 ரூபாய் மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தன்மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கடன்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் மொத்த சொத்து மதிப்பு 9 கோடியே 21 லட்சத்து 83 ஆயிரத்து 31 ரூபாய் என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 2 கோடியே 55 லட்சம் மதிப்பில் 2 சொகுசு கார்கள் உள்ளதாகவும் அசையும் சொத்துகளின் மதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 77 ஆயிரத்து 241 ரூபாயும், அசையா சொத்துக்களின் மதிப்பு நான்கு கோடியே 82 லட்சத்து 10 ஆயிரத்து 790 எனவும் வேட்புமனுவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்