மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். மண்ணடி பகுதியில் வாக்கு சேகரித்த அவருக்கு, ஏராளமானோர் பூமாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மேலும் சிலர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, தம்பு செட்டி தெரு, அரண்மனைக்கார தெரு ஆகிய பகுதிகளில் வினோஜ் பி செல்வம், துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அங்கேயும் அவருக்கு, பொதுமக்கள் பூ மாலைகளை அணிவித்து, உற்சாக வரவேற்பினை அளித்தனர்...