திமுக, அதிமுக கடுமையாக மோதிகொள்ள இடையே போராட்டத்தில் குதித்த பாஜக - பரபரப்பாக்கிய வடசென்னை விவகாரம்
திமுக, அதிமுக கடுமையாக மோதிகொள்ள இடையே போராட்டத்தில் குதித்த பாஜக - பரபரப்பாக்கிய வடசென்னை விவகாரம்
வடசென்னை மக்களவைத் தொகுதியில் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது யார்? என்பது தொடர்பாக திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வடசென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் பகல் 12 மணிக்கு முதலாவதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி அமைச்சர் சேகர்பாபு உடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, யார் முதலில் வேட்புமனுவை தாக்கல் செய்வது என தேர்தல் அதிகாரி முன்னிலையில் திமுகவினரும், அதிமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறுபுறம், வெகுநேரமாக காத்திருப்பதாக கூறி பாஜக-வினரும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே மூன்று கட்சி தொண்டர்களும் கூடியதுடன், மாறி மாறி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.