தமிழகம் வரும் அமித் ஷா... கடைசி நேரத்தில் மாறிய முடிவு

Update: 2024-04-04 05:17 GMT

#amithsha | #loksabhaelection2024 | #tamilnadu

தமிழகம் வரும் அமித் ஷா... கடைசி நேரத்தில் மாறிய முடிவு

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, தேர்தல் பிரச்சாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பிரச்சாரம் செய்ய அமித் ஷா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவருடைய பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, நாளை தமிழகம் வருகிறார். தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்