பிரதமர் சொன்னதை செய்து ஆ.ராசாவின் வினோத பிரசாரம் - நீலகிரியில் சுவாரஸ்ய சம்பவங்கள்

Update: 2024-04-11 07:22 GMT

பிரதமர் சொன்னதை செய்து

ஆ.ராசாவின் வினோத பிரசாரம்

நீலகிரியில் சுவாரஸ்ய சம்பவங்கள்

#nilgiris #campaign #electioncampaign #elections2024 #dmk #thanthitv #Raja

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இளைஞர்கள் பக்கோடா விற்றுக்கொண்டு பிழைத்து கொள்ளுங்கள் என, பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டும் வகையில், ஆ.ராசா பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். பெட்ரோல், டீசல் விலையை சுட்டிக்காட்டி, இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றி நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்