அமெரிக்காவின் தெற்கு நியூ ஜெர்சியில் ஏற்பட்ட தீ கட்டுகடங்காமல் செல்வதால்,சுற்று வட்டரத்தில் வசிக்கும் மக்கள் அப்புறபடுத்தப்பட்டுள்ளனர். நியூ ஜெர்சி நகரின் காட்டுபகுதியில், கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட தீ மலமலவென பரவியதில், காட்டு தீயாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் பத்திரமாக அப்புறபடுத்தபட்டுள்ளனர். இது வரை 11,500 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகிய நிலையில், தீயை முழுமையா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயனைப்பு வீரரகள் போராடி வருகிறார்கள். இருவது வருடத்தில் இல்லாத அளவுக்கான சேதாரத்தை இந்த காட்டு தீ உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக பலரும் அச்சாம் தெரிவித்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது குறிப்பிட தக்கது