இந்தியாவை மிரட்டும் நேட்டோ - என்ன காரணம்?

Update: 2025-07-17 01:43 GMT

ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்யக்கூடாது - நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்யக்கூடாது என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே,, இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுடன் வணிக உறவைத் தொடரக் கூடாது என்றும், தொடரும் பட்சத்தில் அவர்கள் மீது பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த எச்சரிக்கை, உக்ரைனுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்