நின்று கொண்டிருந்தவரை திடீரென கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே இழுத்த விமான எஞ்சின்

Update: 2025-07-09 07:39 GMT

இத்தாலியில் விமான நிலைய ரன்வேயில், விமானத்தின் எஞ்சினில் ஒருவர் இழுக்கப்பட்டு உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிலான் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த‌ நிலையில், இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பயணியா? அல்லது விமான நிலைய பணியாளரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் "டாக்ஸிவே பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையால்" விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்