தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரு நாடுகளின் தெற்குக் கடற்பகுதியில் சுமார் 222 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 4 ஆக பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும், வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.