Trump Viral Video | பிரஸ்மீட்டில் உலகையே மறந்து டிரம்ப் முரட்டு தூக்கம்
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் தூங்கிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் குட்டி தூக்கம் போட்டதாக வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி, நகைச்சுவை செயல்களால் எப்போதுமே உலகத்தோட கண்களை ஈர்ப்பவர். அவருடைய ஒவ்வொரு செயலும் நோட் செய்யப்பட்டு, இணையத்தில் டிரெண்ட் செய்யப்படும். அப்படி... வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தூங்கியதுதான் இப்போதைக்கு உலக டிரெண்டிங்காக இருக்கிறது. ஓவல் அலுவலகத்தில் பிரபலமான எடை இழப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்த அறிவிப்பின் போதுதான் அவர் அயர்ந்து தூங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. வீடியோவில் டிரம்ப் கண்களை மூடிக்கொண்டு இருப்பதும், சில சமயங்களில் கண்களை தேய்த்துக் கொண்டு, கண்களை திறந்து வைத்திருக்க அவர் சிரமப்படுவதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அலுவல் கூட்டத்தில் டிரம்ப் தூங்கியதை ஜனநாயக கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். DOZY DON திரும்பிவிட்டார் என டிரம்பை விமர்சனம் செய்திருக்கிறார் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம். டிரம்ப் தூங்கும் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வேகமாக பரவ, ஆட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு 79 வயதாகும் டிரம்பின் உடல்நலம் மற்றும் தலைமைத்துவம் குறித்த விவாதங்களையும் பற்ற வைத்திருக்கிறது. அதற்கு கண்ணிருக்கும் எல்லோரும் தூங்கதான் செய்வார்கள் என வடிவேல் பாணியில் டிரம்ப் ஆதரவாளர்கள் பதில் பஞ்ச் வைக்கிறார்கள்.