அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் திரைப்படத்துறை மிக வேகமாக அழிந்து வருவதாகவும், படப்பிடிப்புகள் அனைத்தும் உள்நாட்டிலேயே எடுக்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.