அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில், வீடற்றோரை வெளியேற்றி, நகரை பாதுகாப்பானதாகவும், அழகாகவும் மாற்றப்போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வீடு இல்லாம்ல சாலையோரம் வசிப்போர் உடனடியாக நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அவர்கள் தங்க இடம் கொடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ள டிரம்ப், ஆனால், அந்த இடம் தலைநகருக்கு வெளியே இருக்கும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், குற்றவாளிகள் யாரும் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது எல்லையில் நடப்பது போன்று விரைவாக நடக்கப்போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.