அணு ஆயுதத்தை வெடிக்க வைக்க போகிறதா US? -டிரம்ப் ரியாக்ஷனால் அதிரும் உலகம்
உலகின் பிற நாடுகளைப் போன்று அமெரிக்காவும் அணு ஆயுதங்களை சோதித்துப் பாார்க்கும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். புளோரிடாவுக்கு விமானத்தில் பயணம் செய்தபோது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிரம்ப், மற்ற நாடுகள் சோதனை செய்வதால், அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை செய்யப்போவதாகவும், வேறு எந்த நாட்டையும் விட தங்களிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும், அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்யும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.