இந்தியரின் கைக்கும் வரும் உலகின் பெரும் விமான நிறுவனத்தின் பவர்

Update: 2025-07-31 09:11 GMT

ஏர் நியூசிலாந்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி

உலகின் மிக பாதுகாப்பான விமான நிறுவனமாக கருதப்படும் ஏர் நியூசிலாந்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது விமான நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரியாக இருக்கும் ரவிசங்கர் அக்டோபர் 20ஆம் தேதி முதல் ஏர் நியூசிலாந்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். இந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிகில் ரவிசங்கர் இதற்கு முன்பு ஹாங்காங், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள Accenture நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்