தி ஓஷன் ரேஸ் ஐரோப்பா 2025' போட்டியின் இரண்டாம் பகுதி இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் (Portsmouth) தொடங்கியது. ஸ்பெயினின் கார்டகெனா (Cartagena) நோக்கி பயணிக்கும் படகுகள் தொடர்ந்து 1400 கடல் மைல் பயணம் மேற்கொண்டு ஆறு நாட்களுக்கு பிறகு ஸ்பெயினின் கார்கெனாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியின் முதல் பகுதியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினாவில் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் மருத்துவ மையம் நோக்கி மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்தவர்கள் குழந்தைகளுக்கு பொம்மை உள்ளிட்டவற்றை வழங்கி மகிழ்வித்தனர். மேலும், அவர்கள் சூப்பர் ஹீரோக்கள் மற்றும் டிஸ்னி இளவரசிகள் போல் உடை அணிந்து வந்தது குழந்தைகளை குஷி படுத்தியது. அர்ஜென்டினாவின் அதிபராக ஜேவியர் மிலே பொறுப்பேற்றது முதல் நிதி குறைப்பு காரணமாக சுகாதார அமைப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.