போரில் தலையிட்ட புதிய போப் - உலகமே கவனிக்க சொன்ன அந்த வார்த்தை

Update: 2025-09-01 03:59 GMT

போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தும் போப் லியோ

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினிய போலிஸ் பகுதியில் உள்ள பள்ளியில், நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு போரை நிறுத்த வேண்டும் என போப் லியோ வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய போப் லியோ, இந்தத் துயரமான துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதேபோல உக்ரைன் போரானது தொடர்ச்சியாக மரணத்தையும் அழிவையும் விதைத்து வருவதாகவும், இதனை முடிவுக்கு கொண்டுவர உடனே பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவதாகவும் போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்