சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் குலுங்கிய பூமி - பீதியில் அலறி ஓடிய மக்கள்

Update: 2025-05-14 07:38 GMT

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீசில், சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. க்ரீட் Crete தீவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.3-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் எகிப்து, இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்டானிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்