பகவத் கீதை மீது கை வைத்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற தமிழ் வம்சாவளி பெண்
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழ்நாட்டு வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பதவியேற்றுக் கொண்டார். கனடாவில் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று, மார்க் கார்னி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிதா ஆனந்தை வெளியுறவு அமைச்சராக நியமித்தார். இந்நிலையில், பகவத் கீதை மீது கை வைத்து அனிதா ஆனந்த் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அனிதா ஆனந்தின் பெற்றோர்கள் காலமான நிலையில், இருவரும் மருத்துவர்கள் என்பதும், தந்தை எஸ்.வி ஆனந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.... தாயார் சரோஜ், பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.