பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பேரணியில் திடீர் பதற்றம் - ஸ்பெயினில் நடந்த காட்சி
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மாட்ரிட்டில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை அகற்றி போராட்டக்காரர்கள் முன்னேறியதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.