இப்படி ஒரு மரணமா? -உலகையே சோகத்தில் ஆழ்த்திய சவுதி இளவரசரின் இறப்பு செய்தி
தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்ட சவுதி இளவரசர் 'அல்-வலீத் பின் காலித் பின் தலால்' காலமானார்
2005 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சவுதி இளவரசர் அல்-வலீத் பின் காலித் அல்-சவுத் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. கோமா நிலைக்கு சென்ற இளவரசர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக மீளவில்லை. தூங்கும் இளவரசர் என அழைக்கப்பட்ட அவர் தனது 36 வயதில் உயிரிழந்துள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அஸர் தொழுகைக்குப் பிறகு ஜூலை 20 இளவரசர் அல்வலீத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் கூறப்பட்டுள்ளது.