உலுக்கிய விமான விபத்து - எரிந்த நிலையில் ஓடிய மாணவர்கள் - நடுங்கவிடும் பலி எண்ணிக்கை
வங்கதேசத்தில் கல்வி வளாகத்தில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
டாக்காவில் F-7 BGI என்ற ராணுவ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தியாபாரி பகுதியில் உள்ள கல்வி வளாகத்தில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
மாணவர்களின் வகுப்பு நிறைவடைந்த சமயத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததால், பெரும் பதற்றம் ஏற்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினர்.
குறிப்பாக விபந்து நடந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விமான விபத்தில் விமானத்தை இயக்கிய பைலட் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் நெருக்கம் அதிகம் இருந்த பகுதி என்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.