உக்ரைனில் ஆளில்லா விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதே சமயம், ரஷ்யாவின் ராணுவத் தளவாடங்களை பெருமளலவில் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள டிரோன் தளங்கள், வெடிமருந்து கிடங்குகள் ஆகியவற்றை குறிவைத்து தங்கள் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்து, பெருமளவு ராணுவ தளவாடங்களை உக்ரைன் ஆயுதப் படைகள் அழித்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.