பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த முன்னணி வீரர் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் இது தனது கடைசி போட்டியாக இருக்கலாம் என உருக்கமாகப் பேசியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்சை, 6க்கு 4, 7க்கு 5, 7க்கு 6 என்ற செட் கணக்கில் சின்னர் வீழ்த்தினார்.
போட்டிக்கு பிறகு பேசிய ஜோகோவிச், தன்னால் மீண்டும் இந்த களிமண் களத்தில் விளையாட முடியும் என உறுதியாக தெரிவிக்க முடியாது எனக் கூறிய ஜோகோவிச், அதனால்தான் போட்டி முடிந்த பிறகு சற்று உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டதாக தெரிவித்தார்.
38 வயதாகும் ஜோகோவிச், அவரது கேரியரின் கடைசிக் காலத்தில் இருக்கும் நிலையில், பிரெஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டி,, பாரிஸில் அவரது கடைசிப் போட்டியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.