Russia Ukraine War | இதுவரை உலகம் பார்க்காத கொடூரத்தை செய்த ரஷ்யா - என்ன ஆகுமோ?

Update: 2025-09-08 05:36 GMT

உக்ரைனின் கீவ் நகரில் (Kyiv) ரஷ்யா ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், 18 பேர் காயமடைந்தனர். 2 நாடுகளுக்கு இடையேயான போரில் இதுவரை இல்லாத அளவிற்கு ரஷ்யாவானது 13 ஏவுகனைகளுடன் 805 ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தியது.

இந்த திடீர் தாக்குதலில் ரஷ்யா ராணுவம் அனுப்பிய 751 ட்ரோன்களையும், 4 ஏவுகனைகளையும் உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் காரணமாக, ஒரு குடியிருப்பு கட்டடம் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்