Russia | Putin | பயணிகள் ரயில் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா - நடுங்கவிடும் காட்சிகள்
உக்ரைன் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - மக்கள் படுகாயம். உக்ரைனில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷ்ய ட்ரோன் தாக்கியதில், ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். வட உக்ரைன் பகுதியான சுமி பகுதியில் உள்ள, ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, ரஷ்யாவின் ட்ரோன் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில் ரயில் முழுவதும் சேதமடைந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “அந்த ரயிலில் மக்கள் இருப்பார்கள் என தெரிந்தே, ரஷ்யா தாக்கியது ஒரு தீவிரவாத தாக்குதல்“ என அவர் கண்டனம் தெரிவித்துள்ளர்