சீனாவும் இந்தியாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு முதன்மையான நிதி அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், மன்னிக்கமுடியாத வகையில், நேட்டோ நாடுகளும் ரஷ்ய எரிசக்தி மற்றும் ரஷ்ய எரிசக்தி தயாரிப்புகளை வாங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், கடுமையான வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகளும் இந்தியா, சீனா மீது அமெரிக்காவை போன்று வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.