இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நான்காவது முறையாக மேலும் மூன்று பிணை கைதிகளை ஹமாஸ் தரப்பு விடுவித்தது. இதன் மூலம் ஹமாஸ் தரப்பில் இதுவரை 18 பிணை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக மூன்று பிணை கைதிகளும் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.எட்டு மாதங்களுக்குப் பிறகு காசா மற்றும் எகிப்துக்கு இடையேயான எல்லை நகரமான ரஃபா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக காயமடைந்த பாலஸ்தீனியர்கள் சிலர், அங்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரையிலான பாலஸ்தீனியர்களுக்கு உடனடி மருத்துவ சேவை தேவைப்படுவதால் உடனடியாக அவர்கள் காசாவை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.